சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டியாஞ்சலி விழா... வீடியோ காட்சி
இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற நாட்டிய விழா நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் துவக்கி வைத்தார்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் பங்கேற்று கலைஞர்களை வாழ்த்தினார். ஒரே நேரத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனம் ஆடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் உலக சாதனைக்காக நடேசர் கவுத்துவம் என்ற பெயரில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
Leave a Comment