பிரசித்தி பெற்ற எலவத்தடி காளிக்கோவிலில் திருவிழா .... வீடியோ காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலவத்தடி கிராமத்தில் அமைந்துள்ளது. வாழவந்தான்காளிஅம்மன் கோவில்.இதுமிகவும் பிரசித்தி பெற்றது. இது அருள் வாக்கு அருளும் இடமாக திகழ்கிறது. இங்கு வாரந்தோறும்ஞாயிற்றுகிழமை களில்பில்லி, சூன்யம், குடும்ப பிரச்சனை, தொழில் பாதிப்பு, கோர்ட் வழக்கு , திருட்டு, திருமணம், வேலை போன்ற பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு அருளபடுகிறது.
இங்கு கடந்த 22ம் தேதி மாசிதிருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. இதன் முக்கிய திருவிழாவான 1008 பால் குட ஊர்வலம்,மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு எலவத்தடி அய்யனார் கோவிலில் இருந்து பால்குடஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. அங்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வாழவந்தான் காளி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் 108 மூலிகை திரவியங்களால் மகா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.
இதனையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலஷ்மி ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை ஆகியவை நடைபெற்றது. சண்டிஹோமத்திற்காக யானை, குதிரை, கன்றுடன் கூடிய பசு வர வழைக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் காளி தேவி உபாசகர் சிவமுருகன், பெருமாள் உபாசகர் சிவசங்கர்ஷனார் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் பொதி படையாச்சி, பொத்தி படையாச்சி, தம்பாசி படையாச்சி வகையறாக்கள்கிராமபொதுமக்கள் சிறப்பாக செய்தன. மாசிமக திருவிழாவையொட்டி 4ம் தேதி வரை தினமும்10 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment