திருப்பதியில் மார்ச் 16-ந்தேதி தெப்பத்திருவிழா


திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது.
 
வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது. திருமலையில் புதிதாக ரூ.97 கோடியில் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சேவை புரியும் 2 ஆயிரம் சேவகர்கள் ஓய்வு பெற வசதியாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில்களில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச் 5 மற்றும் 12-ந்தேதிகளில் ஊனமுற்றோர், முதியோர்கள், மார்ச் 6 மற்றும் 16-ந்தேதி 5 வயது குழந்தைகள் தங்களது தாய், தந்தையருடன் காலை 9 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் பக்தர்கள் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.82 கோடியே 77 லட்சமும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81 கோடியே 13 லட்சமும் வருமானமாக கிடைத்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 



Leave a Comment