குமரியில் சிவாலய ஓட்டம் மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது


சைவ, வைணவ ஒற்று மையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
 



Leave a Comment