திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்.16 தெப்ப உற்சவம்....
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி நிரல்.....
பிப்ரவரி 16 -
முதல் நாளில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத் தொடர்ந்து உற்சவர்களை தெப்ப தேரில் வைத்து தெப்ப குளத்தை 3 முறை சுற்றி வரப்படும்.
பிப்ரவரி 17 -
ருக்மணி சமேத கிருஷ்ணர் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது.
பிப்ரவரி 18 -
உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
பிப்ரவரி 19 -
19-ந் தேதி உற்சவரான மலையப்பசாமியை தேரில் வைத்து தெப்ப குளத்தை 5 முறை சுற்றி வரப்படும்.
பிப்ரவரி 20 -
உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப குளத்தை 7 முறை சுற்றி வரப்படும்.
Leave a Comment