செங்கல் சிவபார்வதி கோயிலில் அதிருத்திர மஹாயாகம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அதிருத்திர மஹாயாகம் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை மஹாபலி புரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே 111 அடி உயரத்தில் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைத்துள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் இன்று முதல் மார்ச் 3 வரை அதிருத்திர மஹா யாகம் நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து இங்கு 111 உயரத்தில் அமைந்துள்ள எட்டு நிலைகளை கொண்ட சிவலிங்கத்தின் உள் அறை களில் பிரதிஷ்டை செய்ய உள்ள 108 சிறு சிவலிங்க சிலைகள் மஹாபலி புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அந்த சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் பக்தர்கள் செண்டை மேளம் முழங்க ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து 108 ஆட்டோகள் அணி வகுப்பு புடன் எராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பூஜைக்காக வைக்க பட்டு அதிருத்திர மஹா யாகம் துவங்கி நடத்து வருகிறது மார்ச் 3 சிவராத்திரி தினத்தன்று இந்த யாகம் முடிந்த பின் 108 சிவலிங்கங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
Leave a Comment