திருப்பதி தலமுடி காணிக்கை ஏலம் ரூ.7.94 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி காணிக்கை ஏலம் விட்டதின் மூலமாக 7.94 கோடி ரூபாய் வருவாய்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடிகள் இன்று ஏலம் விடப்பட்டது. 4 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் 7.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஒரு கிலோ 22,499 ரூபாய் என 31 அங்குலத்திற்கு மேல் உள்ள முதல் ரக தலைமுடி 4100 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் 1000 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக 2.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 16 முதல் 30 அங்குலத்திற்கு உட்பட்ட இரண்டாவது ரக தலைமுடி ஒரு கிலோ 17 ஆயிரத்து 250 ரூபாய் என 30 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 3300 கிலோ விற்பனை செய்ததன் மூலமாக 5.69 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது ரக தலைமுடி 4 ஆயிரத்து 300 கிலோ விற்பனை செய்யப்பட்டதில் மொத்தம் 7. 94 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment