திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்......
திருப்பதி திருமலை தேவஸ்தானம் 2019 - 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டாக ரூ.3,116.25 கோடிக்கு தாக்கல் செய்து இருக்கிறது. ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் விபரம்.... ரூ.3116.25 கோடி வருமானம்
இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்ப்பு
நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ரூ.845.86 கோடி
விரைவு தரிசனம் மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.235 கோடி
பிரசாத விற்பனை மூலம் ரூ.270 கோடி
காணிக்கை தலைமுடி விற்பனை மூலம் ரூ.100 கோடி
விடுதி அறைகள், கல்யாண மண்டபங்கள் மூலம் ரூ.105 கோடி
பங்கு வைப்புகள் மூலம் ரூ.67.54 கோடி வருமானம்
ஆர்ஜித சேவை டிக்கெட்கள் விற்பனை மூலம் ரூ.57 கோடி வருவாய்
இதர முதலீடுகள் மூலம் ரூ.204.85 கோடி வருமானம்
வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.3,116.25 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் செலவு கணக்கு....
பிற முதலீட்டுச் செலவினம் ரூ.78.85 கோடி
ஊழியர்கள் சம்பளம் மற்றும் கூலி ரூ.625 கோடி
என்ஜினீயரிங் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இரும்பு தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு ரூ.541 கோடி
மானியம் மற்றும் பங்களிப்புத் தொகை ரூ.283 கோடி
அசையா சொத்துக்களை பராமரிக்க ரூ.400 கோடி
ஆதார செலவினம் ரூ.339.58 கோடி
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க ரூ.260 கோடி
ஓய்வூதியம் வழங்க ரூ.75 கோடி
மின் கட்டணமாக ரூ.52 கோடி
அசையா சொத்துக்களை பழுது பார்க்க ரூ.135 கோடி
கடன், ஊழியர்களுக்கு முன்பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.52.11 கோடி
விளம்பரம் ரூ.10 கோடி, பல்வேறு முதலீடு மற்றும் இதர செலவினத்துக்கு ரூ.264.21 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Leave a Comment