காஞ்சி ஸ்ரீ ஏரிகாத்த கோதண்டராமர் திருக்கோயில் தெப்ப உற்சவம்....
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஏரிகாத்த கோதண்டராமர் திருக்கோவில் மாசிமகம் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வலம் வந்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகத்தில், புகழ் பெற்ற ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கோதண்டராமருக்கும், கருணாகர பெருமாளுக்கும், தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா கோலாகலமாக நடக்கும்.
இந்த ஆண்டு மாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், கருணாகர பெருமாள் தெப்ப உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று காலை,கருணாகர பெருமாளுக்கு திருமஞ்சனமும், பகல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதியுலா வந்தார்.
அதனை தொடர்ந்து, கருணாகர பெருமாள், கோவில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை சுற்றி பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.
அதன்பின், பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இவ்விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
Leave a Comment