ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மக திருவிழா.... வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் மாசி மக திருவிழா ஆசியாவிலேயே மிக உயரமான 37-அடி குதிரை ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் குதிரைக்கு திருவிழாவில் 1500- க்கும் மேற்பட்ட மாலைகள் போட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங்களம் ஊராட்சியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆசியாவிலேயே மிக பெரிய 37-அடி உயரமான குதிரை ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலின் சிறப்பம்சமாக வேண்டுதலை நிறைவேற்றியதற்க்கு பிறகு பொதுமக்கள் தங்களது வேண்டுதலை 70-அடி உயர காகித மாலை அணிவித்து நிறைவேற்றுவார்கள். அந்தளவுக்கு மிக சக்திவாந்த கோவிலாகும்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறை வேற்றும் விதமாக புதுக்கோட்டை மற்றும் வெளி மாவட்டங்கள் சிங்கப்பூர்,மலேசிய ஆகிய வெளிநாடுகளிலிறுந்தும் 37-அடி உயர குதிரைக்கு பெரிய மாலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காணிக்கையாக செலுத்திகின்றனர்.
இரண்டு நாட்களாக 1500- க்கும் மேற்பட்ட மாலைகள் போடப்பட்டுள்ளன.
இந்த கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வதால் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Comment