கருட தரிசனமும், அதன் பலனும்
கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.
கருடனைக் கண்ட உடனே அனைவரும் தரிசிப்போம். ஆனால் முறையாக தரிசிக்க வலது கை மோதிர விரலால் இடது கன்னம் மற்றும் வலது கன்னம் இரண்டையும் மாறி மாறி மூன்று முறை அதாவது மொத்தம் ஆறு முறை ‘நாராயணா’ என்ற நாமம் சொல்லி தரிசிக்க வேண்டும்.
கருடனை வெவ்வேறு கிழமைகளில் தரிசிக்கும் போது வெவ்வேறு பலனை அடையலாம்.
ஞாயிறு கிழமையில் கருடனைத் தரிசித்தால் நோய் அகலும்.
திங்கள் கிழமை கருடன் தரிசினம் – குடும்ப நலம் ஏற்படும்.
செவ்வாய் கிழமை கருடன் தரிசினம் – தைரியம் உண்டாகும்.
புதன் கிழமை கருடன் தரிசினம் – எதிரிகள் நம்மை விட்டு மறைவார்கள்.
வியாழன் கிழமை கருடன் தரிசினம் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி கிழமை கருடன் தரிசினம் – திருமகளின் அருள் கிடைக்கும்.
சனி கிழமை கருடன் தரிசினம் – முக்தி கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் கருடனை முறையாக தரிசித்து கருட பகவானின் அருளை பெற்றுக்கொள்ள முடியும்.
Leave a Comment