நெல்லை ஸ்ரீ கோத பரமேஸ்வரர் - சிவகாமி அம்பாள் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் செங்காணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோத பரமேஸ்வரர் - சிவகாமி அம்பாள் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் குன்றத்தூரை அடுத்த செங்காணி கிராமத்தில் அமைந்துள்ள நவகைலாய ஆலயங்களில் நான்காவதாகவும் ராகு ஸ்தலமாகவும் விளங்குகிறது ஸ்ரீ கோத பரமேஸ்வரர் - சிவகாமி அம்பாள் ஆலயம். ராகு ஸ்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிற்பகல் 2 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆனார்கள்.
ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி ராகுவாக உள்ள ஸ்ரீ கோத பரமேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மங்கலப்பொருட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment