திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி....
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நவகிரகங்களில் 'ராகு' க்கான பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் ஆகும் . இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் ,நாகவல்லி, நாககன்னி , என்ற தனது இரு மனைவியருடன் பூரண சரீரத்துடன் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார் .ராகு பகவான் இவ் ஆலய மூலவர் நாகநாதசுவாமி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக ஆலய தல புராணங்கள் கூறுகிறது .
இத்தலத்து மூலவர் நாகநாத சுவாமியை சூரியன் ,சந்திரன் , பிரம்மா ,கார்க்கோடகன் , ஆகியோர் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக ராகுபெயர்ச்சி விளங்குகிறது .
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு பெயர்ச்சி இன்று மதியம் 1 .25 மணிக்கு ராகு பகவான் ,கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சி யானார். ,ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம் ,மிதுனம் ,கடகம் ,கன்னி, விருச்சிகம், தனுசு ,கும்பம் ,மீனம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது .
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் , உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர்.
Leave a Comment