ராகு - கேது பாதிப்பில் இருந்து தப்பிக்க பாராயணம்.... 


ராகு கேது பெயர்ச்சியினால் வரும் பாதிப்பு மற்றும் துன்பங்கள் நீங்க  ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய துவித நாக பந்தம் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துவித நாக பந்தத்தை ஒரு பேப்பரில் எழுதி ஆண்கள் பர்ஸில் அல்லது சட்டை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது எடுத்து பாராயணம் செய்யலாம்.

முதலில் சிரமமாக கடினமாக இருக்கும் பின்னர் எளிமையாக மனதில் பதிந்துவிடும்.

பெண்கள் தங்கள் பர்ஸில் வைத்து கொள்ளலாம்.

இதை ஸ்டிக்கராக வடித்து நம் கண்படும் இடங்களில் ஒட்டி வைத்து கொள்ள இன்னும் பாராயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.

இதை கடினம் என்று நினைப்பவர்கள் ராகுக்கு பரிகாரமாக துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவர். ஆதலால் எலுமிச்சம் பழத்தை தாங்கள் செல்லும் இடங்கள் மற்றும் இருக்கும் இடங்களில் எடுத்து / வைத்து கொள்ளலாம்.

கேது பரிகாரமாக தர்ப்பை புல்லை சட்டை பேண்ட் பாக்கெட், பர்ஸ், பை,  வண்டி, அலுவலக மேசை டிராயர் என அனைத்து இடங்களிலும் வைத்து கொள்ளலாம். தாங்கள் இருக்கும் மற்றும் செல்லும் இடங்களில் எடுத்து செல்லலாம் அல்லது வைத்து கொள்ளலாம்.

பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் படிப்பது மிகுந்த பலனை கொடுக்க கூடியது ஆகும். முதன் முதலில் இதை படிக்க தொடங்கும்போது செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து தொடங்க வேண்டும். துவித நாக பந்தம் படம் கடைகளில் கிடைக்கும். 

இதை வாங்கி பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தவாறு காட்சியளிக்கும், இப்படம் கடும் நாக தோஷத்திற்க்கு ஏற்றது. ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். 

முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.

சேயா சேயாதே தேயா சேயாசே 
மாயா மாயாவா வாயா மாயாமா 
வாயா மாவாயா மாயா சேமாசே. 
யோயா நேயாவோ யாயே தேயாளே 

- இவற்றை தினமும் 108 முறை படித்து வரவேண்டும். இதன் மூலம் சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம், அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றி பிறந்த தோஷம், மகப்பேறு கால துன்பம் இராகு, கேது தோஷம் போன்றவை நீங்கப்பெறலாம்.

மிகவும் எளிமையான எல்லோராலும் செய்ய கூடிய பரிகாரம்.
 



Leave a Comment