ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்..... ரிஷபம்


தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! 

கிரகநிலை:
குருபகவான் சப்தம ஸ்தானத்திலும் - ராகு தைரிய ஸ்தானத்திலும் - சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.    

இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் - மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

குடும்பப் பொருளாதாரநிலை:
கணவன் - மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றிபெற முடியும். அசையும்-அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகம்:
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

அரசியல்:
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும்.  நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும் மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

கலைஞர்கள்:

பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ-மாணவியர்:
     
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

உடல் ஆரோக்கியம்:

தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல்நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும்,  அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

ரோகிணி:
உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது  கவமனாக இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.  மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். 

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும் நவக்கிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
Mobile/WhatsApp: +91 7845119542



Leave a Comment