திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவ விழா
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவ விழா தொடங்கி உள்ளது.
சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். மூலவர் சன்னதியில் உத்தரவு வாங்குதல் போன்ற பூர்வாங்க பூஜைகள் நேற்று நடந்து இன்று பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து திருவீதி வலம் வந்து பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது பெருமாளுக்கும் தேவியருக்கும் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது இன்று இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
தினசரி காலை மற்றும் இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். பிப்.,15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிஷேகம், பிப்.,18 ல் வெண்ணெய்தாழி சேவையும், பிப்.,19ல் பகல் 11:00 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு இரவு தெப்பமும் நடைபெற உள்ளது மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது தெப்ப உற்சவத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
Leave a Comment