பூலோகநாதர் ஆலய கல்வெட்டு குடமுழுக்கு விழா
சோழற்காலத்துக்கு முந்தைய 1800 ஆண்டு பழமை வாய்ந்த திருமங்கலம் பூலோகநாதர் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பூலோகநாதர், பூலோகநாயகி தாயார் ஆலயம் அமைந்துள்ளது. கி.பி 3-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை சார்ந்த இந்த ஆலயத்தில், ஒலி எழுத்துக்கள் எனப்படும் தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாக விளங்கிய குறியீடு எழுத்துக்கள் அடங்கிய பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்த ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த ஆலயத்தின் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றில் ஏராளமான கல்தூண்கள் அமைந்துள்ளன. இதில் நாட்டியக்கலையின் அபிநயங்கள் 60க்கும் மேற்பட்ட கையளவு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்குள்ள காலசம்ஹார மூர்த்தி கல்லினால் செய்யப்பட்டவர். ஏராளமான சிற்பங்கள், கல்வெட்டுகள் இந்த ஆலயம் மற்றம் கருங்கற்கலால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்களில் காணப்படுகின்றன.
புராதானமான சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
Leave a Comment