திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது..... 


திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.  
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 
இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. வரும் 22-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. 

நிகழ்ச்சி நிரல்....
11-ஆம் தேதி காலையில் தொட்டி உற்சவம், இரவு பூதவாகனம்,
12-ஆம் தேதி காலை புருஷாமிருகம் உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகனமும், 
13-ஆம் தேதி காலை ஆட்டுக்கிடா வாகன உற்சவம், இரவு வெள்ளி மயில் வாகனம், 
14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.
15-ஆம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகன உற்சவம், 
16-ஆம் தேதி காலை ரத உற்சவம் எனப்படும் தேரோட்டம், இரவு மங்களாசாசன உற்வசம், 
17-ஆம் தேதி காலையில் வெள்ளித் தொட்டி உற்சவம், மாலை பரிவேட்டை உற்சவம், இரவு குதிரை வாகன உற்சவம், 
18-ஆம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனம், ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் உற்சவம், 
19-ஆம் தேதி காலை வெள்ளித் தொட்டி உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி, மாலை தெப்பல் உற்சவம், இரவு குதிரை வாகனம், மெளன உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், 
20-ஆம் தேதி புதன்கிழமை மாலை கிரிவலம், இரவு பந்தம்பரி உற்சவம், 
21-ஆம் தேதி இரவு வேடம்பரி பிரபல உற்சவம் ஆகியவை நடைபெறும். 
22-ஆம் தேதி இரவு திருக்கல்யாண மயில் வாகன உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது. 
 



Leave a Comment