திருப்பதி ஏழுமலையான் அருளை முழுமையாக பெற....


திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற சரியான  வழிமுறை..... 

திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புவது தவறு. 

வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். 

முதலில் தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

 தாயாரை தரிசித்த பின்னர் அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். 

நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாக மலைக்கு செல்லலாம். 

திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான ஸ்ரீ ஆதி வராகர் ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும்.

 திருமலையில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க செல்ல வேண்டும். 

ஏழுமலையானை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்ய வேண்டும். 

இப்படி செய்வதன் மூலம் பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கி ஏழுமலையான் அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.



Leave a Comment