இன்னல்களை அகற்றும் கால சர்ப தோஷ பூஜை....! 


கால சர்ப தோஷ பூஜைகளுக்காக, செம்பு, ஈயம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட தனித்தனி நாகர் வடிவ சிலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். கால சர்ப தோஷ பூஜை செய்யும் நாள் அன்று, முதலில் நீராடிவிட்டு புத்தாடை உடுத்தி பூஜை செய்யும் இடத்ததை பூக்கள் கொண்டு அலங்கரித்துக்கொள்ளுங்கள். 

பூஜை செய்யும் பீடத்தில் பூஜைக்கு என ஒரு தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டில் நீங்கள் வாங்கிய நாகர் சிலைகளை வைத்துக்கொண்டு, மஞ்சளில் விநாயகர் படித்து அதை அரச இலையிலோ அல்லது மாவிலையிலோ வைத்து அந்த பூஜை தட்டில் நாகர் சிலைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.  

முதலில், ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே பூஜையை தொடங்க வேண்டும். பின்னர், நாகர் சிலைக்கு தண்ணீர், பால், தேன், மற்றும் இதர அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து முடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து, நாகர் சிலைக்கு மஞ்சள், சந்தனம் இட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். 

அதன் பின் விஷ்ணு சகஸ்ரநாமம், நவநாக் ஸ்தோதிரம், ஆகியவற்றை சொல்லிக்கொண்டே தேங்காய் உடைத்து அதில் நெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். உடைத்த தேங்காயை நாகர் சிலைக்கு முன்பாக வைத்து, பூஜைக்கு நீங்கள் படைக்க நினைத்த படையல்களால் பழங்களோ, தேங்காயோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ அதை அரச இலையில் வைத்து படைத்து சூடன் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். 

வழிபாட்டின் போது உங்களது பிரச்னைகளை எல்லாம் மனிதில் நினைத்து பூஜை செய்ய, அதற்கு தீர்வு கிடைக்கும். பூஜை முடிந்ததும், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓடும் ஒரு புன்னிய நதியில் செம்பு மற்றும் ஈயத்தால் ஆன நாகர் சிலையை போட்டு விடுங்கள். வெள்ளி நாகர் சிலையை அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழங்கி விடுங்கள். 

இந்த பூஜை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், அர்பணிப்புடனும் செய்தால் கால சர்ப பூஜைக்கான பலன்களாக நீண்ட நாட்களாக அவர்கள் படும் துன்பமும், துயரமும், இன்னல்களும் படிப்படியாக அவர்களை விட்டு விலகும். 
 



Leave a Comment