காக்கும் கடவுளை குளிர்விக்கும் அருகம்புல்.... 


அருகம்புல் மாலை அணிவித்து காக்கும் கடவுளான விநாயகரின் அருளை பெறலாம்....  

அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாகியது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா?... இந்த கதையை படியுங்கள். 

அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.

விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.

உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.

அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.விநாயகரை குளிர்விக்க அருகம்புல் மாலை.
 



Leave a Comment