தை அமாவாசை .... மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கோயில்களில் கட்டுக்கடங்கா கூட்டம் குவிந்துள்ளது.
இராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித தீர்த்தமாடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து இராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்காணோர் வழிபாடு நடத்தி உள்ளனர். தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவி கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், நோய் தீர்த்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இந்துகளின் முக்கிய புனிததலமான கன்னியாகுமரியில் முக்கடல்கள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள் தண்ணீர்யிட்டு மற்றும் பிண்டங்களை கடலில் கரைத்தும் வழிப்பட்டனர்.
Leave a Comment