சந்திராஷ்டமத்தின் விளைவுகள் தணிய... 


சந்திராஷ்டமம்..... ஒவ்வொரு ராசிக்கும் எட்டாமிடத்தில் சந்திரம் வரும் பொழுது அதைச் சந்திராஷ்டமம் என்கிறோம்.  பொதுவாக ஒரு ராசிக்கு சந்திராஷ்டம தினத்தில் மனம் நிலைபாடு இல்லாமல் இருக்கும். அலைச்சல்கள், எதிர்ப்புகள் இருக்கும். 

காரியத்தடை போன்றவற்றால் அவதி உண்டாகும். இதுபோன்று சந்திராஷ்டமத்தின் விளைவுகள் தணிய வலம்புரி சங்குகளில் குங்குமத்தை பூஜித்து, பவனானுக்குரிய மந்திரங்கள் ஓதி நெற்றியில் இட வேண்டும். அரிசியை சங்கில் வைத்து வழிப்பட்டு அதை எடுத்து இருக்கும் அரிசியுடன் சேர்த்து தானம் செய்தாலும் நல்லது.

அதுமட்டுமல்ல தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து பூஜை அறைக்குச் சென்று நேற்று சங்கில் ஊற்றி உள்ள நீரை வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். 

இதேபோல வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை  செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும்.

 இந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிட்டும்.
 



Leave a Comment