அர்ச்சனைக்கு உகந்த பூக்கள்....
கடவுளுக்கு மிக நெருக்கமான விஷயம் பூக்கள். பூக்கள் இல்லாமல் கடவுள் பூஜை நிறைவு பெறுவது இல்லை. அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.
விநாயகருக்கு, அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். அதேபோல செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே விநாயகர் வழிபாடுக்கு பயன்படுத்தப்படுகிறது.
முருக பெருமானுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் உகந்தவை.
துர்க்கை அம்மனுக்க்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும்.
Leave a Comment