கணபதி ஹோமம் செய்வதன் பயன்கள்.... 


காரிய தடை நீங்க  கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம். கணபதி ஹோமத்தை எல்லா நேரத்திலும் செய்து விட முடியாது. அதிகாலை நேரத்தில், அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரத்தில் செய்வது தான் கணபதி ஹோமத்திற்கு பலன்களைத்தரும். 

கணபதி ஹோமத்தின் பலன்கள்...
அரசு பதவிகள், ராஜ வசியம் பெற தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
 
அதேபோல திருமணத் தடை நீங்கவும், வாழ்க்கை வளமோடு இருக்கவும் நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். 

நீங்கள் எடுத்துக் கொண்ட காரியம் வெற்றி பெற நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். தொட்டதெல்லாம் ஜெயமாக கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தல் நல்லது. பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் கடன் தொல்லை, வறுமையிலிருந்து விடுபடலாம். 

பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணபதி ஹோமத்தை செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.
 



Leave a Comment