குமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்


குமரியில் கட்டப்பட்டு இருக்கும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. 

விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.  5.25 ஏக்கர் நிலத்தில்  ரூ. 22.50 கோடி மதிப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று நடைபெற்றுள்ளது. அதிகாலை 4 முதல் காலை 7 மணி வரை சுப்ரபாதம், அதனை தொடர்ந்து காலை 7  முதல் 7.30 மணி வரை உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றுள்ளது. அன்பிறகு காலை 7.30 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் மகா சம்ப்ரோட்ஷணம் நடைபெறுகிறது. 

இதனை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். . இக்கோயிலுக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஒற்றையால்விளை வழியாக செல்லலாம். மேலும், பக்தர்கள் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் மாலை வரை நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



Leave a Comment