சதுர்த்தி விரதம் தோன்றியது எப்படி? ஒரு சுவையான கதை.... 


கயிலாயத்திற்கு ஒருமுறை  வந்த பிரம்மனை பார்த்து, சந்திரன் ஏளனமாக சிரித்தார். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 

விநாயகர் சாபம் கொடுத்த அந்த நொடியே சந்திரன்  வானத்தில் இருந்து காணாமல் போனார். நலவு வானத்தில் காணாமல் போனதை கண்டு தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டிக்கொண்டனர். 

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார். 

இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது. 
 



Leave a Comment