திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா..... 


திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கும் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

 விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பஸ், கார்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தைப்பூச விழாவையொட்டி 50 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதுபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.



Leave a Comment