சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் யாகசாலை பூஜைகள் .....
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் 100 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் மூலம் யாகசாலைகள் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை அடுத்த ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் உள்ளது பள்ளிக்கொண்டேஸ்வர் ஆலயம்.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் சிவன் லிங்கமாக இல்லாமல் வேறெங்கும் காண முடியாத வகையில் முழுஉருவமாக பள்ளிகொண்டு காட்சி அளிப்பதால் புண்ணிய ஸ்தலமாக பக்தர்களால் பார்க்க படுகிறது.தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீ மரகதாம்பிகா ஸ்மேத வால்மிகிஸ்வரர் மற்றும் மங்களாம்பிகா ஸ்மேத பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆகியோருக்கு வரும் 23ம் தேதி மஹா கும்பாபிஷேக விழாவானது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.
இதையொட்டி ஆலயத்திற்கு எழில்மிகு வண்ணம் தீட்டப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.கும்பாபிஷேக விழாவினை காஞ்சி காமக்கோடி விஜேந்திர சரஸ்வதி சாமிகள் நடத்த உள்ளனர்.இதற்காக நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிவாச்சாரியார்கள் ஆலயத்தில் முகாமிட்டு யாக சாலை பூஜைகள் துவக்கியுள்ளனர்.பிரசித்திபெற்ற இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.எனவே ஆலய நிர்வாகம் மற்றும் ஆந்திரா இந்து சமய அறநிலைய துறை சார்பாக பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Leave a Comment