விராலிமலை முருகன் கோயிலில் திருப்படி திருவிழா
விராலிமலை முருகன் கோயிலில் திருப்புகழ், திருப்படித் திருவிழாவும் நடைபெற்றது. அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி வழங்கியதாக கூறப்படும் விராலிமலை முருகன் கோயிலில் நால்வர் திருவருட் சங்கப்பேரவை சார்பில் திருப்படித் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மலைமேல் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நேற்று காலை திருப்புகழ் திருப்படித்திருவிழா துவங்கியது. முருகன் வள்ளி தெய்வானைக்கு 32 சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு வெள்ளி கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அதை தொடர்ந்து மலை அடிவாரத்தில் படி வாசலில் திருவடிப்பூஜை நடைபெற்றது.
பின்னர் பேரவையினறும் பக்தர்களும் திருவிளக்கு பூஜையும், கோமாதா பூஜையும் செய்து தோரோடும் திருவீதி வலம் வந்து அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு படிக்கும் பூஜைகள் செய்து திருப்புகழ் பாடி மலைமேல் வந்து முருகனை வழிபட்டனர். தொடரந்து முருகனுக்கு சிறப்பு மஹாதீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது.
Leave a Comment