திருமலையில் பௌர்ணமி கருட சேவை ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவத்தையொட்டி நாளை நடைபெற இருந்த பவுணர்மி கருட சேவை உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது.

கோபத்தில் வரும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதுதான் இந்த பிரணய கலக உற்சவம்.அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபத்தை தணிக்கும் வகையில் மலையப்ப சுவாமி மீது பூப்பந்து வீசும் பிரணய கலக உற்சவம் நாளை மறுதினம் மாலை 4 மணி முதல் 6 மணிக்கு இடையே நடைபெற உள்ளது.

அதனால் பௌர்ணமி தினமான சனிக்கிழமை (டிச. 22) இரவு நடைபெறவிருந்த கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிச. 23) பத்மாவதி ப்ரணயகலகோற்சவம் நடைபெற உள்ளது.



Leave a Comment