திருவையாறில் ஜனவரி 21 தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம்
திருவையாறில் 172 ஆம் ஆண்டு தியாகராஜ ஆராதனை விழா ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 21-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவுக்குச் சபையின் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் தலைமை வகிப்பார். இந்த விழாவை கர்நாடக, இந்துஸ்தானி இசை கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் சபையின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே. வாசன், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாக்காலமான 5 நாள்களிலும் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவில் பங்கேற்று, அவருடைய கீர்த்தனைகளை பாடி, அஞ்சலி செலுத்துவர்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளான ஜன. 25-ம் தேதி தியாகராஜ ஆராதனை நடைபெறவுள்ளது. இதில், இசைக் கலைஞர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி மகா அபிஷேகத்தில் பங்கேற்பர். இதனிடையே, தேசிய நிகழ்ச்சிகள் ஜன. 23-ம் தேதி இரவு நடைபெறும் என்றனர்.
Leave a Comment