திருச்செந்தூர் கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்....
மார்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் டிச. 16 முதல் ஜன. 14வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 - 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், மாலை 6.45 முதல் இரவு 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
இதேபோல முக்கிய விழா நாள்களான டிசம்பர் 23ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 1ஆம் தேதிஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
Leave a Comment