திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்


" உயிர்க்கு உயிராய் .... நின்றான் "
உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின்
உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்
பல நடமாட வண்டு பாட
விரைசேர்பொன் இதழிதர மென்
காந்தள் கை ஏற்கும் மிழலையாமே .


நூல்களாலே சொல்லப்படுகிற எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களையும் முறையாக ஒருங்கே படைத்து, அந்த யோனி பேதங்களில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் தானே உயிர் ஆதாரம் ஆகி, அந்தந்த உயிர்கள் தோறும் தங்கியுள்ள பெருமானது கோயில், மலையிலே தங்கும் மேகங்கள் மத்தள ஓசையைச் செய்யப் பல மயில்கள் நர்த்தனமாட, வண்டுகள் பண்பாட, இவற்றைக் கண்டும், கேட்டும் அனுபவித்த கொன்றை மரங்கள், மணமுடைய பூக்களாகிய பொன்னைப் பரிசாகக் கொடுக்க, அதனை மெல்லிய காந்தள் செடிகள் தம் பூவாகிய கைகளால் ஏற்றுக் கொள்ளும் வளம்மிக்க திருவீழிமிழலை ஆகும்



Leave a Comment