திருவானைக்கா கோயிலில் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் கட்ட கும்பாபிஷேகம்


திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் டிச. 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

திருவானைக்கா கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சம்ய அறநிலையத் துறையினர் தீர்மானிக்கப்பட்டு, சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.

பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு டிச. 9 ஆம் தேதி முதற்கட்டமாகவும், சுவாமி, அம்மன் சன்னதி கோபுர விமானங்களுக்கு டிச. 12 ஆம் தேதி 2 ஆம் கட்டமாகவும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 13 ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து சன்னதிகளுக்கும் மருந்து சாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.



Leave a Comment