ஐயப்பன் – என்று அய்யன் மணிகண்டனுக்கு பெயர் வந்தது எப்படி?
அய்யன் ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையாகும் பாக்கியம் பெற்றவர் பந்தள மகாராஜா ராஜசேகரன். தனக்கு கிடைத்தது தெய்வக்குழந்தை என்பதை அறியாமல் இருந்த நிலையில், அவதாரத்தின் நோக்கம் வெளியாகி ஐயப்பனை பிரியும் காலமும் வந்தது. கழுத்தில் மணி இருந்த காரணத்தினால் மணிகண்டன் என்ற பெயர் பெற்ற அய்யன்.
தனது வளர்ப்பு தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரனிடம், இனி நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால், மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டது என்றார். அதை கேட்ட பந்தள மகாராஜா ராஜசேகரன், அய்யனே, உன்னை காண நான் எப்படி வருவேன் என கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் என்னை பார்க்க வரும்போது ஒரு கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என பதில் கொடுத்தார்.
சபரிமலைக்கு அய்யன் மணிகண்டனை தரிசிக்க பந்தள மகாராஜா ராஜசேகரன் செல்லும்போது, மலையின் ஏற்ற இறக்கங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே தவித்து போவார். பயன களைப்பில், அவர், அய்யோ அப்பா என சொன்னதே திரிந்து ஐயப்பன் என்ற செய்தியும் தகவலும் காலம் காலமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஐயன் என்றால் தலைவன் என்றொரு பொருள். அந்த ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை அதாவது ஐயப்பன் என்றானது.
இன்றைக்கும் மகரஜோதியின் போது அய்யன் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது கண்கொள்ள காட்சியகும்.
Leave a Comment