சபரி மலை ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்வது எப்படி?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் "விர்ச்சுவல் கியூ' கூப்பன் திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு, நீங்கள் செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரம் தங்களுக்கு ஏற்றதோ அந்த நேரத்தில் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கலாம். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.
பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.
Leave a Comment