ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.
ஒரு மண்டலமான, 48 நாட்களுக்கு விரதம் இருந்து மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள் பக்தர்கள். கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தைத் தொடங்கினர். நேற்று மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். ஆங்காங்கு உள்ள ஐயப்பன் கோவில்களிலும், பிற கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் மகாலிங்கபுரத்தில் ஐயப்பன் கோவிலில் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை போட்டுக் கொண்டனர்.
Leave a Comment