திருப்பதி மொபைல் ஆப் சேவை தற்காலிக நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யக்கூடிய மொபைல் ஆப் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எந்த இடத்தில் இருந்தும் தங்களது மொபைல் போன் மூலமாக அறைகள், தரிசன டிக்கெட் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் அனைத்து வசதிகளையும் முன்பதிவு செய்து கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தா திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்ற மொபைல் ஆப்பை பயனபாட்டிற்கு கொண்டு வந்தது.
இந்த மொபைல் ஆஃப் சேவையில் பக்தர்கள் அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டை பெற்ற பிறகு பணம் செலுத்தக்கூடிய கேட்வே பண பரிமாற்றத்தில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையின் காரணமாக தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மொபைல் ஆஃப் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப துறை மேலாளர் சேஷாரெட்டி தெரிவித்துள்ளார்.
எனவே பக்தர்கள் தேவஸ்தான மொபைல் ஆஃப் க்கு பதிலாக www.ttdsevaonline.com என்ற இணைய தளத்தில் தேவஸ்தானத்தின் சேவைகளை பயன்படுத்தி பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment