நேந்திரம் வாழைக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு
கேரளப் பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் திருமாலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
திருகாட்கரை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில் வாழை மரங்கள் பயிரிட்டு இருந்தார். ஆனால் அவை வளர்ந்தும் எந்த பலனும் தராமல் அழிந்து போனது. இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.
பின்னர் அந்த பக்தர், தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக் குலை ஒன்றை கேரள மாநிலத்தில் உள்ள திருக்காட்கரை என்ற இடத்தில், வாமன அம்சமாக எழுந்தருளியுள்ள திருமாலுக்கு சமர்ப்பித்து தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார். இதையடுத்து உயர்ந்து வளர்ந்திருந்த வாழை மரங்களில் குலைகள் காய்த்துத்தள்ளின.
பெருமாலின் நேத்திரங்களின் (கண்களின்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்றிலிருந்து ‘நேத்திரம் வாழை’ என பெயர் வந்து, அது மருவி நேந்திரம் என பெயர் பெற்றுள்ளது.
பெருமாளை நேர்ந்து கொண்டு இந்த வாழைப் பழங்கள் உருவானதால் நேந்திரம் வாழை என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
Leave a Comment