திருவானைக்கா கோயிலில் பாலாலயம்
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பாலாலயம் நடைபெற்றது.
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடியில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கோயில் கோபுரங்கள் புணரமைப்புப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. 95 சதவீதப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள பரிவார தேவதைகளுக்கு வெளி நடராஜர் சன்னதியில் முதல் கால பாலாலயம் நடைபெற்றது. அக்டோபர் 28 ஆம் தேதி இரண்டாம் கால பாலாலயம் நடை பெறுகிறது. இதையடுத்து, முதல்கட்டமாக பரிவார தேவதைகளுக்கான மகா கும்பாபிஷேகம் டிச.9ஆம் தேதியும், சுவாமி, அம்மனுக்கு 2ஆம் கட்டமாக டிச.12ஆம் தேதி நடைபெறுகிறது.
Leave a Comment