திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் .... திவ்ய தரிசனம்,டைம் ஸ்லாட் தரிசனங்கள் ரத்து


திருப்பதி பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் திவ்ய தரிசனம்,டைம் ஸ்லாட் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் பக்தர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் திருப்தி எழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத சாதனையாக நேற்று ஒரே நாளில் 1,05,018 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் பக்தர்களுக்கு 5,13,566 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மற்றும் கடந்த இரண்டு புரட்டாசி சனிக்கிழமைகளிலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்த்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தரிசனத்தில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது.

மேலும் இன்னும் 2 புரட்டாசி சனிக்கிழமைகள் மீதம் இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10-ஆம் தேதியில் இருந்து 18 -ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.எனவே வருகிற 6, 7, 13, 14, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அத்துடன் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வரும் வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள் மேலும் பக்தர்களுக்கு குடிநீர், மோர்,அன்னதானம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.



Leave a Comment