மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் குருப் பெயர்ச்சி


நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:
நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.


நிகழும் மங்களகரமான கலியுகாதி 5119 - சாலிவாகன சகாப்தம் 1940 - பசலி 1428 - கொல்லம் 1194ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு - இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி - 05.11.2018 - திங்கட்கிழமையன்று மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.



Leave a Comment