திருப்பதி செல்வோரின் கவனத்திற்கு!


திருமலை நடைபாதை மார்க்கத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால் மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன் திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடைபாதை வழியாகப் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடைசிப் படிகளின் அருகே வனத்திற்குள் இருந்து ஒரு சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட பக்தர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்காணிப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தச் சிறுத்தையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மலைப்பாதையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வறட்சியின் காரணமாக நீர் பருக வனவிலங்குகள் வெளியில் சுற்றி திரிந்து வருகின்றன. எனவே, நடைபாதை வழியாகத் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாகவும், பலத்த விழிப்புடனும் செல்லுமாறு திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.



Leave a Comment