மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

மதியம் 12 மணிக்கு பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் கேரள மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து கலந்து கொண்டு பானைகளில் பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர்.



Leave a Comment