பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல், ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 11.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் உச்ச பூஜை, அன்னதானம், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து நாளை 1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment