தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் பந்தகால் நடப்பட்டது


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ராராஜகோபுரத்தின் முன் பந்தகால் நடப்பட்டது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அப்போது பக்தர்கள் வெள்ளத்தால் திருவண்ணாமலை நகரமே திக்குமுக்காடும். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த விழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி மகா தீப பெருவிழா நடக்கிறது. அன்று திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தமும், கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

 



Leave a Comment