துளசி இலையை பறிக்கும் முறை!


துளசியை தனித்தனி இலையாகப் பறிக்கக்கூடாது துளசியைக் கதிரோடு பறிக்க வேண்டும். நான்கு இதழ்களோடும், நடுவில் தளிரும் உள்ளதாகவும், அல்லது ஆறு இதழ்கள் உள்ளதாகவும் பறிக்க வேண்டும். துளசி இலை கிடைக்காவிட்டால் துளசித்தண்டை பறித்துக் கொள்ளலாம். அதுவும் இல்லாவிட்டால் துளசி வேர், வேரும் இல்லாவிட்டால் துளசி நட்டிருந்த மண்ணை எடுத்து சுவாமியின் பாதத்தில் வைக்கலாம். மண்ணும் கிடைக்காவிட்டால் துளசி என மனதார உச்சரித்தாலே போதும். துளசி இலை வைத்து பூஜிப்பதன் பலனை அடையலாம். அத்தகைய சிறப்பு துளசி இலைக்கு உள்ளது.



Leave a Comment