செவ்வாய்பேட்டை மாரியம்மன்...வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு!


சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் செய்யப்படும். மேலும் இத்திருவிழா நாட்களில் எண்ணற்ற பக்தர்கள் விரதமிருந்து மாரியம்மனை வழிபட்டால் தீராத வியாதிகளும், மன சஞ்சலங்களும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் திருவிழாவில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளாக ஊஞ்சல் உற்வசம், அம்மனுக்கு பாவாடை நைவேத்யம், மகா அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடைபெறும். அதன்படி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (08-08-2018) அம்மன் பொங்கல் வைத்து படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு சிறப்பு அலங்கார வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியை கண்டு அம்மனை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment