ஆடிகிருத்திகை - மயிலம் கோவிலில் ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!
அழகன் முருகனுக்கு உகந்த நாளான ஆடிக்கிருத்திகை நாளை (05-08-2018) கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அதன்படி நாளை மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும்.
பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மலையை சுற்றியுள்ள நெல்லி மற்றும் மாந்தோப்புகளில் உணவு சமைத்து அன்னதானம் வழங்குகிறார்கள். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வந்த போவதற்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எண்ணிலடங்கா பக்தர்கள் முருகன் சன்னிதானத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment